முன்னாள் ஜனாதிபதி ரணில் தேசியப் பட்டியல் எம்.பியாவாரா..! ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து தொடர்பில் போலியானவை அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(25) ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் எம்.பி
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவிடமும் குறித்த கேள்வியை கேட்போது, கோபத்தில் பொய் செய்திகளை உருவாக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் அவ்வாறு ஒன்றும் கதைக்கவில்லை என்றே தெரிவித்துள்ளார்.
ரணிலை தேசிய பட்டியலில் உறுப்பினராக்கும் முயற்சி எடுத்திருக்க கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



