யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது குறித்த இளைஞன் வீடு ஒன்றிற்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடல் கூற்று பரிசோதனைக்காக
இளைஞர் இவ்வாறான நிலையில் காணப்படுவதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் செல்வச்சந்திரன் மிமோஜன் வயது 27 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரது கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
You may like this..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam