கிண்ணியாவில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அண்ணல் நகர் பகுதியில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைக்கவசம் அணியாமல், தாறுமாறாக மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குறித்த இளைஞர் ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேக நபருக்கு தற்போது பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் தொடர்ச்சியாகப் பல்வேறு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாகப் போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பொலிஸாரின் இந்தத் தீவிர நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் மத்தியில் பாராட்டுகளும் வரவேற்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri