யாழில் மூத்த சகோதரனின் இழிவான செயல்: உயிரை மாய்த்த 20 வயது யுவதி
யாழில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரனால் வன்புணர்வுக்கு உள்ளாகிய இளம் பெண் மனவிரக்திக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பாதிப்பு
போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளதாகவும் அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ள போது சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனை

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை
இளவயதினர் இடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள்
அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam