முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் மாயம்
முல்லைத்தீவு - மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குடும்பத்தினருடன் கடலில் குழித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பமாக ஆண், பெண் என சுமார் 15 பேர்வரையில் குறித்த கடற்பகுதியில் குளிக்க சென்றுள்ளார்கள்.
இதனை கண்ட வாடி மீனவ குடும்பத்தினை சேர்ந்த ஒருவர் இந்த கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என கூறிய நிலையிலும் அதனை பொருட்படுத்தாது குளிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே ஒருவர் கரையில் இருந்து சற்று தொலைவில் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் அப்பகுதி பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





படத்த பாத்துட்டு, என்னயா ம*ரு படம் எடுத்து வெச்சிருக்க-னு கேட்டாரு" - RK Selvamani Open talk Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
