இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை
காலி மாவட்டம், யக்கலமுல்லை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம் (25.10.2023) இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய எம்.நவரத்ன என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
அவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நவரத்ன, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த நபர், பாதாளக் குழுவினருடன் தொடர்புபட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam