கடற்றொழிலாளர் ஒருவர் மீது கொடூர தாக்குதல்: வெளியான காணொளியால் பரபரப்பு
மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள கடற்றொழிலாளர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி கடற்றொழிலாளர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
கடற்றொழிலாளர் மீது தாக்குதல்
மேலும், சம்பவ தினத்தன்று அதிகாலை விடத்தல் தீவு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணையில் குறித்த கடற்றொழிலாளர் சென்று அட்டையை பிடித்ததாக கூறி அவரை இருவர் கட்டி, கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளரின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள போதும் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam