வெளிநாட்டு முதலீட்டுப் பணத்தில் 6 ஹோட்டல்களில் முதலீடு செய்த முன்னாள் அமைச்சரின் மகன்! அம்பலமான உண்மைகள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Dollars
By Shadhu Shanker Sep 23, 2026 01:36 PM GMT
Report

இலங்கையில் முதலீடு செய்வதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த இரு முதலீட்டாளர்கள் கொண்டுவந்த சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் (200 கோடி ரூபாய்க்கும் அதிகம்) பணத்தை, முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் மகன் தக்ஷித போகொல்லாகம என்பவர் மோசடியான முறையில் தனது தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, ஜனாதிபதியிடம் எழுத்துமூல முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

‘சிவில் புலனாய்வு முன்னணி’ அமைப்பின் தலைவர் சஞ்சய மகவத்த, ஜனாதிபதி செயலகத்தில் குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர்

அவரது கூற்றுப்படி, 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரஜைகளான லீ மற்றும் அன்ரிவ் ஆகிய இரு முதலீட்டாளர்கள், லிமிட் வன் என்ற நிறுவனத்தின் ஊடாக இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் கூடிய திட்டமொன்றுக்காக குறித்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அந்த முதலீட்டை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்காக Lankaila என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதாகவும், அப்போது நிலவிய அரசியல் அதிகாரம் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி முன்னாள் அமைச்சரின் மகன் தக்ஷித போகொல்லாகம அந்த நிறுவனத்தின் உரிமையை பெற்றுக்கொண்டதாகவும் சஞ்சய மகவத்த தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டுப் பணத்தில் 6 ஹோட்டல்களில் முதலீடு செய்த முன்னாள் அமைச்சரின் மகன்! அம்பலமான உண்மைகள் | A Written Complaint Has Been Submitted

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவரையும் தவறாக வழிநடத்தி, சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை தனது தனிப்பட்ட சொத்தாகப் பயன்படுத்தி ஆறு ஹோட்டல்களில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 நிதி மோசடிகள்

பல ஹோட்டல்களில் அந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டதாகவும், பின்னர் குறித்த ஹோட்டல் குழுமத்தின் பங்குகள் சட்டவிரோதமாக மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இவ்வாறான நிதி மோசடிகள் காரணமாக, நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அச்சம் கொள்வதாகவும் சஞ்சய மகவத்த தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டுப் பணத்தில் 6 ஹோட்டல்களில் முதலீடு செய்த முன்னாள் அமைச்சரின் மகன்! அம்பலமான உண்மைகள் | A Written Complaint Has Been Submitted

மேலும், சுமார் எட்டு ஏக்கர் அரச காணியை நிரப்பி கையகப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் எதிர்காலத்தில் தகவல்களை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக குற்றப் புலனாய்வு விசாரணையை ஆரம்பித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சஞ்சய மகவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நீதிமன்றத்தின் உத்தரவு

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நீதிமன்றத்தின் உத்தரவு

சுவிட்சர்லாந்தில் போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்! தயாரிப்பாளரை சந்திக்கும் வாய்ப்பு

சுவிட்சர்லாந்தில் போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்! தயாரிப்பாளரை சந்திக்கும் வாய்ப்பு






you may like this..







மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US