ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் - மலேசிய அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பும் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு 160க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மலேசிய அரசிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
மியன்மாரில் தொடரும் வன்முறைகள் மற்றும் கட்டாய இராணுவச் சேர்க்கை காரணமாக அகதிகளுக்குப் பெரும் ஆபத்து நேரிடும் என்றும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மியன்மார் இராணுவ ஜெனரல் மின் ஆங் லைங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி அகதிகளைத் திருப்பி அனுப்ப மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்த அமைப்புகள் தமது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த அகதிகள் நாடு திரும்புவது தன்னார்வ அடிப்படையிலானது என மலேசிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1500 அகதிகளை திருப்பியனுப்ப முடிவு
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, மலேசியாவில் மியான்மரைச் சேர்ந்த சுமார் 193,800 அகதிகள் வசித்து வரும் நிலையில், முதற்கட்டமாக எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி 1,500 அகதிகளைத் திருப்பி அனுப்ப மலேசியா திட்டமிட்டுள்ளது.

அகதிகள் மியான்மருக்குத் திரும்பும்பட்சத்தில், அங்குள்ள இராணுவம் மற்றும் பல்வேறு ஆயுதமேந்திய குழுக்களால் அவர்கள் கட்டாயமாகப் போரில் ஈடுபடுத்தப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாய்நாடான மியன்மாரில் தொடரும் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் காரணமாக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் ஆபத்தான கடல் மற்றும் தரைவழிகள் ஊடாக மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை - விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டமூலத்தின் வர்த்தமானி வெளியீடு
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri