மூன்று வயது குழந்தையை விட்டு சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையின் தாயார் ஒருவர் அவரது கணவரின் எதிர்ப்பை மீறி மறுமணம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
21 வயதுடைய பெண் ஒருவரே தன் குழந்தையை விட்டு 22 வயதுடைய இளைஞன் ஒருவர் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்த பெண்ணை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றுமுன்தினம் (14.08.2023) உத்தரவிட்டார்.
குறித்த பெண் சிறுவயாத இருக்கும் போது இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் முடித்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்தவந்துள்ள நிலையில் அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில் கணவர் தொழிலுக்காக வெளிநாடு சென்று அண்மையில் திரும்பி வந்த நிலையில் குறித்த பெண் அந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருடன் திருமண உறவில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.
பொலிஸாரை தாக்க முற்பட்டமை
இதனையடுத்து பல தடவை அந்த இளைஞனுடன் தொடர்பு வேண்டாம் என கணவர் தெரிவித்து வந்த நிலையில் கணவரையும் குழந்தையையும் விட்டு குறித்த இளைஞருடன் சென்றுள்ளார்.
இதன்போது விசாரணைக்கு வந்த பெண் குறித்த இளைஞருடன் செல்ல போவதாகவும் தெரிவித்து பொலிஸாரை கடமையை செய்யவிடாது அவர்களை தாக்கமுற்பட்டதுடன் பொலிஸ் நிலைய யன்னல் கண்ணாடியை தாக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்ட பெண் அவரது 3 வயது சிறுகுழந்தையை விட்டு சென்றமை மற்றும் பொலிஸார் கடமையை செய்யவிடாது செயற்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற
முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 28 ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.