கந்தளாயில் வானுடன் லொறி மோதியதில் பெண்ணொருவர் பலி
கந்தளாய் -கிதுலுதுவ பிரதேசத்தில் வானுடன் லொறி மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (22.02.2024) மாலை இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வான் எதிர் திசையாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியுடன் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ள நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri