சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
மாத்தறையில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று(22.02.2024) மாலை நானு ஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வீதியை விட்டு விலகிய பேருந்து மண் மேட்டில் மோதுண்டதால் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
அத்துடன், சாரதி அதிக வேகமாக மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என நானுஓயா பொலிஸாரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து பயணித்த போது அதில் சிறுவர்கள் உட்பட 40 பேர் இருந்ததாகவும் குறித்த சிறுவர்கள் தற்போது பாதுகாப்பாக நானுஓயா சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam