காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணிக்கு 40 - 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை
இதேவேளை குறித்த பகுதிகளில் சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் அந்த கடற்பிராந்தியங்களுக்கு, மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளில் சில சந்தர்ப்பங்களில் கடல் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri