ட்ரம்ப்பை அடுத்து மன்னர் சார்லஸுக்கும் அபாய எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் (Donald Trump) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த மன்னர் சார்லஸுக்கும் (King Charles III) ராணி கமீலாவுக்கும் ஒரு அபாய எச்சரிக்கை செய்தி வந்துள்ளது.
சேனல் தீவுகளில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மன்னர் சார்லஸும் ராணி கமீலாவும் சென்றிருந்தனர்.
அங்கு கமீலா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்து அவரது காதில் ஏதோ சொல்ல, உடனடியாக மற்ற அதிகாரிகள் அவரை அங்கிருந்து வேகவேகமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்
அதனையடுத்து, மன்னர் சார்லஸும் ராணி கமீலாவும் அருகில் இருந்த ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
This is the moment Queen Camilla was ushered out of the Expo here in Jersey (while still holding her ice cream!) amid a security incident that was later deemed a false alarm… pic.twitter.com/50ZPyibuCP
— Matt Wilkinson (@MattSunRoyal) July 15, 2024
அப்பகுதியில், ட்ரோன் ஒன்று பறந்ததால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து, கிடைத்த எச்சரிக்கை செய்தி போலியானது என தெரியவரவே, மன்னரும் ராணியும் மீண்டும் தங்கள் நிகழ்ச்சியைத் தொடர்ந்துள்ளனர்.
எனினும், இது குறித்து பக்கிங்காம் அரண்மனை எந்த அதிகாரபூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |