சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி சுனக் விடுத்துள்ள எச்சரிக்கை
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு (Britian) புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்புவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி (Rishi Sunak) சுனக் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் இந்த திட்டத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து, இன்று (22.04.2024) கூடவுள்ள நாடாளுமன்றத்தில் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தே தீரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புறப்படவுள்ள விமானங்கள்
மேலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் 10 அல்லது 12 வாரங்களில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு விமானங்கள் புறப்படும் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஜூலை மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விமானங்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |