ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கப்பட்ட பெறுமதியான பேனா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாக தொழிலை ஆரம்பித்து 50 ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்ட வைபவத்தில் ஜனாதிபதிக்கு அவரது சட்டத்துறை சகாக்கள் லட்சக்கணக்கான ரூபா பெறுமதியான மொன்ட் பிளேங்க்((Mont Blanc) பேனாவை நினைவு பரிசாக வழங்கியுள்ளனர்.
தடுப்பு காவல் உத்தரவுகளில் கையெழுத்திட சிறந்த பேனா-ஜனாதிபதி
மேலும் RW என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை ஜனாதிபதியின் நெருக்கமான சகாவான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொனால்ட் பெரேரா, வைபவத்தில் கலந்துக்கொண்ட அனைத்து சட்டத்தரணிகளுக்கு வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் தனக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பேனாவை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி“தடுப்பு காவல் உத்தரவுகளில் கையெழுத்திட சிறந்த பேனா” எனக் அனைவருக்கும் கேட்கும் வகையில் சத்தமாக கூறியுள்ளார்.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சமகாலத்தவர்கள் உட்பட பல சட்டத்தரணிகள் கலந்துக்கொண்டதுடன் பிரதான உரையை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆற்றினார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொனால்ட் பெரேரா, திலக் மாரப்பன, பைசர் முஸ்தபா ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.
மொன்ட் பிளேங்க் பேனாவின் ஆரம்ப விலை 380 அமெரிக்க டொலர்கள்
மொன்ட் பிளேங்க் பேனா ஒன்றின் சாதாரண ஆரம்ப விலை 380 அமெரிக்க டொலர்கள் என்பதுடன் 380 டொலர்களில் இருந்து அதிகமான விலைக்கு அந்த பேனாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
எனினும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பேனாவின் உண்மையான விலை என்ன என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த பேனாவின் விலையானது ஆயிரம் டொலர்களுக்கு மேல் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
