ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து 50 ஆண்டுகள் பூர்த்தி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.
கடந்த 1972ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார். அதன் பின் சுமார் ஐந்து வருட காலப்பகுதி மாத்திரமே அவர் சட்டத்தரணியாக தொழில் செய்திருந்தார்.
அதன் பின் முழுநேர அரசியல்வாதியாக செயற்படத் தொடங்கிய அவர், பிரதி அமைச்சராக, அமைச்சராக, சபை முதல்வராக, பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஜனாதிபதியாக என்று 45 வருடங்களை அரசியல் வாழ்க்கையில் செலவிட்டுள்ளார்.

50 ஆண்டுகள் பூர்த்தி
ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து 50 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு சட்டத்துறை வல்லுனர்கள் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இன்று இராப் போசன விருந்துபசாரமும் பாராட்டு விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சட்டத்துறை நிபுணர்களும் மற்றும் பல்வேறு அரசியல்கட்சிகளில் இருக்கும் சட்டத்தரணிகளாக இருந்து அரசியல்துறைக்கு வருகை தந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, ரொமேஷ் டி சில்வா, திலக் மாரப்பன ஆகியோர் நிகழ்வில் சிறப்பு உரைகளை ஆற்றியிருந்தனர்.
ஜனாதிபதியின் பாரியார் சிரேஷ்ட பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த, ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட அரசியல்வாதிகளும், ஜனாதிபதியின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam