ராஜபக்சக்களுடன் இணையப்போகும் சஜித் பிரேமதாச! ஏமாற்றத்தை தழுவிய கஜேந்திர குமார்
தமிழ் மக்கள் ஏற்க முடியாத மொட்டுக் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சஜித் பிரேமதாசவின் ஜக்கிய மக்கள் கட்சி இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவு நரிப்புதோட்டம் பிரதேசத்தில் மே 18 முள்ளிவாய்கால் இன அழிப்பு நினைவேந்தலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”எனவே ஜக்கிய மக்கள் சக்தி தொடர்பாக தமிழ் மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.அதேவேளை தெற்கில் இருக்க கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தமிழ் கட்சிகள் உடந்தையாக இருக்க கூடாது.
விசேடமாக உள்ளுராட்சி சபைகளில் கூட்டாக செயற்பட்டு ஆட்சி அமைப்பதற்காக எங்களுக்கு இதற்கு முதல் எதிரணில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே தமிழ் தேசிய பேரவைக்கே அழைப்பிதழ் எதுவும் விடுவிக்கப்படவில்லை இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டிலே பேச்சுவார்த்தை சுற்று நடைபெற்றது.
ஆனால் இரண்டாம் கட்டமாக ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
