ஊடகவியலாளர்களால் மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் காட்டம்
சமூகத்தில் நாக்கினாலும் பேனையாலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகவியலாளர்களே மறைமுகமாக தன்னை அச்சுறுத்துவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போதுள்ள நெருக்கடி நிலை
தற்போதுள்ள நெருக்கடி நிலையில் நாட்டினை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு
செல்லலாம் அல்லது எமது பிரதேசத்தில் உள்ள சவாலான விடயங்கள் உதாரணமாக டெங்கு
மற்றும் ஏனையவிடயங்கள் தொடர்பில்ஆராய்ந்து அறிக்கையிடலாம்.
ஆனால் தற்போதைய நிலையில் அவ்வாறான ஒன்றும் நடைபெறவில்லை. பிரச்சினைகளை இன்னும் கொஞ்சம் பெரிதாகிவிட்டால் செய்தி கொஞ்சம் பரபரப்பாக போகும். அந்த நிலையில்தான் தற்போது ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள்.
அந்த விடயம் மாற்றப்பட வேண்டும். முதுகில் புண் இருந்தால் காடு நுழைய பயம் என்று கூறுவார்கள். என்னுடைய முதுகில் புண் இல்லை நான் எதற்குள்ளும் புகுந்து விடுவேன் ஆனால் முதுகில் புண்ணை ஏற்படுத்துகின்ற வேலையை தற்பொழுது ஊடகவியலாளர்கள் செய்கின்றார்கள். மறைமுகமாக அச்சுறுத்துகின்றார்கள்.
குறிப்பாக ஊடகவியலாளர் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அந்த பொறுப்பை சரியாக நீங்கள் செய்ய வேண்டும். உங்களுடைய நாக்கினாலும் பேனையாலும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி காணப்படுகின்றது.
மாற்றங்கள் ஏற்பட வேண்டும்
ஆகவே இன்றைய பயிற்சி பட்டறையின் மூலம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் யாழ்ப்பாண மாவட்டம் டெங்கில் முன்னணியில் உள்ளது கடந்த இரண்டு மூன்று மாதங்களாக டெங்கு சம்பந்தமான விடயத்தினை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம்.
டெங்குதொடர்பில் ஊடகங்கள் எவ்வளவுமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சமூகத்தில் எங்கெங்கே பிரச்சனை காணப்படுகின்றதோ அதனைத் தான் ஊடகங்கள் பார்க்க வேண்டும்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் அதனை பார்க்கவில்லை தனிப்பட்ட ரீதியாக தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். அது மாற்றப்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
