யாழ்ப்பாணத்தில் இளைஞனை தாக்கிய பொலிஸார்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
குறித்த முறைப்பாட்டில், நான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்த போது சிவில் உடையில் வந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் என்னை நிற்குமாறு கூறினார்.
பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை
எனக்கு அன்று காய்ச்சல் மெதுவாகவே சைக்கிள் பயணித்ததால் அவர்கள் கூப்பிட்டது
எனக்கு தெளிவாக விளங்கவில்லை. எனினும், மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறுத்தி இறங்கு எனக் கூறினார். ஏன் என கேட்டேன் என்னை முகத்தைப் பொத்தி அடித்தார்கள்.
மேலும், ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை என கேட்க, காய்ச்சல் காரணமாக வரவில்லை என்றேன் மீண்டும் என்னை தாக்கினார்கள்.
நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னை தாறுமாறாக தாக்கிய இரு பொலிஸார் அருகில் இருந்த மதிலுடன் என்னை வீசி விட்டுச் சென்றார்கள். இந்நிலையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன்.
அத்துடன் எனது ஒரு கால் முறிந்துள்ளதுடன் தாக்கிய பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
