அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை கோரும் விசாரணைக்குழு
செனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களை ஆராயும் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு, தகவல் வழங்கியவரான ஹன்சீர் அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை கோரியுள்ளது.
உரிய ஆதாரங்களை பெற்றுக் கொள்வதற்காக மௌலானாவிடம் கடிதம் ஒன்றை வழங்கவும் குழு முயன்றுள்ளது.
இரண்டு பக்க அறிக்கை
அவர் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை உணர்ந்த குழு, அவரிடம் வாக்குமூலத்தை கோரியுள்ளது.
இந்த விசாரணைக்குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஸ ஏ.ஜே.சோசா ஆகியோர் அடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹன்சீர் அசாத் மௌலானா லண்டனில் இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டு, சனல் 4 ஒளிபரப்பிற்கு அவர் வழங்கிய விபரங்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும் அவர் தாம் கூறிய தகவல்களுக்கு இன்னும் ஆதாரங்களை வழங்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |