யாழில் இடம்பெற்ற கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் - எருவன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (25.04.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதாகக் கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




