சூறாவளியால் முறிந்த மரம்: வவுனியா மக்களுக்கு அச்சுறுத்தல் (Photos)
வவுனியாவில் ஏற்பட்ட பாரிய சூறாவளியால், முறிந்த மரம் ஒன்றை இதுவரை அகற்றப்படாததால் பொதுமக்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பாரிய மரங்களும் முறிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள மரத்தின் பாரியகிளை ஒன்று மின்சார இணைப்பின் மீது முறிந்து விழுந்துள்ளது. சூறாவளி வீசி 20 நாட்கள் கடக்கின்ற நிலையிலும், குறித்த மரம் அகற்றப்படாமையினால் பொதுமக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
குறித்த பகுதி பொதுமக்களின் நடைபாதையாக இருப்பதுடன், மாவட்ட செயலகம், பொது வைத்தியசாலை என்பன அருகில் இருப்பதால் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு இடமாகக் காணப்படுகின்றது.
அத்துடன், மரக்கிளை மின்சார இணைப்பின் மீது விழுந்துள்ளமையால் அது அறுந்து விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த மரக்கிளையை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அந்த பகுதியைத் தினமும் பயன்படுத்தி வரும் மாவட்ட அரச அதிபரின் கண்களில் இது படவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், அந்த மரக்கிளை முறிந்து உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரா அதனை அகற்றுவார்கள் என விசனம் தெரிவித்துள்ளனர்.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
