சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவோம்: அநுர திட்டவட்டம்
அரசாங்கம் மற்றும் சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள் பற்றிய உண்மைகளை சமூகத்திற்கு முன்வைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(16.09.2024) வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
தேர்தல் பிரசாரம்
"இந்த தேர்தல் பிரசாரத்தில் எங்கள் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். வெற்றி பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
அடுத்த இரண்டு நாட்களில் புதிதாக எதுவும் இல்லை. எங்களுடைய உண்மைகளை மீண்டும் மீண்டும் முன்வைக்கபடும்.
நம் நாட்டில் பல சமயங்களில் தேர்தல் பணிகள் இப்படியே நடந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எனவே பொதுமக்கள் மத்தியில் ஊகங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரு சந்தர்ப்பங்களில் கலவரம் ஏற்படுவதற்கான அபாயம் பற்றி கூறியுள்ளார்.
ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்
அவ்வாறே ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் ஒரு சம்பவம் பதிவாகியிருப்பதைப் பார்த்தோம்.
எனவே, சதி செய்தாவது சமூகத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கலாம்.
அதை வெளிப்படுத்துவதும், எங்கள் உறுப்பினர்களை எந்த வகையிலும் இதுபோன்ற மோதலில் ஈடுபட வேண்டாம் என்பதும், மோதல் ஏற்பட்டால் பொலிஸாரும் ஆயுதப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களுக்குள் இதுபோன்ற விடயங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
