சர்ச்சையை கிளப்பியுள்ள மற்றுமொரு இரகசிய விகாரை கட்டுமானம்! செய்திகளின் தொகுப்பு
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் இரவு பகலாக அயராது உழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புல்மோட்டை நகருக்கு தெற்கே அரிசிமலையில் வசித்து வரும் ஹம்பாந்தோட்டையை சேர்ந்த திலகவன்ச நாயக்கா என்ற பிக்கு ஒருவரே இந்த விகாரை அமைப்பு நடவடிக்கைகளில் மூளையாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் விகாரை திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், குறித்த பகுதிகளில் பௌத்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக புல்மோட்டை மற்றும் தென்னை மரவாடியில் நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கையில் பிக்கு ஈடுபட்டுள்ளார்.
தமிழ் கார்டியன் செய்தியாளர்கள் புதிய விகாரை தொடர்பில் ஆராய முற்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் இடைமறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,