லண்டனில் தீவிரமாக தேடப்பட்ட தமிழர்! - பொலிஸார் வெளியிட்ட விசேட அறிவிப்பு
லண்டனில் தலைமறைவான தமிழர் ஒருவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த நபரை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலசங்கர் நாராயணன் என்ற 35 வயது நபரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். குறித்த நபர் மேற்கு லண்டனில் இருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பாலசங்கர் நாராயணன் கடந்த 7ம் திகதி லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து தப்பி சென்றுள்ளார். எனினும், தப்பிச் சென்ற சில மணி நேரங்களிலேயே அவர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டனர்.
"பாலசங்கர் நாராயணன் வன்முறையாளராக இருக்கலாம், பொதுமக்கள் அவரை கண்டால் நெருங்க வேண்டாம் எனவும், உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். 999 ஐ அழைத்து தகவல் வழங்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாலசங்கர் நாராயணன் ஆசிய நாட்டவர் எனவும் 5 அடி 9 அங்குளம் உயரம் கொண்ட நடுத்தர உடலமைப்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், பாலசங்கர் நாராயணனை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி....
லண்டனில் பொலிஸாரினால் தேடப்படும் தமிழ் இளைஞன்
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri