தமிழ் சிறுமி ஒருவர் மாயம்! - தேடுதல் நடவடிக்கை தீவிரம் (PHOTO)
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0779979585 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரை எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது சிறுமி காணாமல்போன விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பெற்றோரை தொடர்பு கொள்ள எமது செய்தி பிரிவினர் முயற்சி செய்த போதிலும் தொடர்பு கிடைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.




