யாழில் ஒருவரை வாள் கொண்டு துரத்திய சந்தேக நபரொருவர் கைது
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்த விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று(24.07.2024) இடம்பெற்றுள்ளது.
இராசாவின் தோட்ட வீதியில் உள்ள வீடொன்றிலுள்ள 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கடந்த மே மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்த விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு மூவர் துரத்திச் சென்றுள்ளனர்.
இதனால் அச்சமடைந்தவர் மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து தஞ்சம் கோரியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் கட்டளைக்கமைய சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரொருவர் நேற்று(24) கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர் மீது ஏற்கனவே நான்கு பிடியாணைகள் பிறப்பிக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam