கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை: 82 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை புற நகரப்பகுதி முதல் சாய்ந்தமருது புறநகர் கடற்கரை வீதி போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
தண்டப்பணம் விதிப்பு
இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
இதன்போது கல்முனை சம்மாந்துறை சவளைக்கடை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான புற நகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதற்கமைய, இச்சோதனை நடவடிக்கையின் போது 82 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
