இலங்கை ஆண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் எயிட்ஸ் பாதிப்பானது பெண்களை விட ஆண்களிடையே, ஏழு மடங்கு அதிகமாக காணப்படுவதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக நிகழ்ச்சி திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடத்தில் மொத்தம் 607 புதிய எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த நோய்த்தொற்றின் அதிகரிப்பானது முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்களுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை உறவுகள் இந்தப் போக்கிற்கு நேரடியாகப் பங்களித்துள்ளதாக ஜானகி விதானபத்திரனவ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
