விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வடக்கில் உருவச் சிலை! அநுர அரசாங்கம் வாக்குறுதி கொடுத்ததா..
வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உருவச்சிலை அமைக்க தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பலம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவச்சிலை மற்றும் வடக்கு மாகாண சபை தேர்தல் ஆகியன வடக்கு மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள்.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயம் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். எமது எதிர்பார்ப்பும் அதுதான். தேர்தல் நடந்தால் அரசாங்கத்தின் பலம் தெரியவரும்.
உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்தின் பெரும்பான்மை இழக்கப்பட்து. அவர்களின் 23 இலட்சம் வாக்குகள் இல்லாமலாக்கப்பட்டது.
ஆகையால் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின உண்மை நிலவரம் தெரியவரும் என்றார். அத்தோடு அரசாங்கம் பிரிவினைவாதம் மற்றும் வாக்குறுதிகள் மீறல், முறையான பொது பாதுகாப்பை வழங்க தவறியுள்ள அரசாகத்திற்கு பாடம் புகட்டுவதற்கு தேர்தல் ஒன்றே சரியான வழியாகும் என குறப்பிட்டுள்ளார்.



