முல்லைத்தீவு தேராவில்லில் சிறப்புற இடம்பெற்ற வயல் விழா
முல்லைத்தீவு(Mullaitivu) தேராவில் பகுதியில் அமைந்துள்ள விவசாய பண்ணையில் நேற்றையதினம் (03.07.2024) வயல் விழா மிக பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.
செய்கை முறை விளக்கம்
இதன்போது சிறு போகத்தில் உளுந்து பயிற்செய்கையில் ஏற்படும் சித்திர வடிவ வைரஸ் நோய் தாக்கம் தொடர்பாக எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை கையாளலாம் என்பது தொடர்பாக செய்கை முறை விளக்கமும், உளுந்து பயிர்ச்செய்கை தொடர்பாக செயன்முறை விளக்கமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விழாவில் மாகாண விவசாய பணிப்பாளர் செந்தில்குமரன் சுகந்தி , மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் உள்ளிட்ட மாகாண அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
