தைப்பொங்கலை முன்னிட்டு இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் விசேட நிகழ்வுகள்! (Photo)
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தைப்பொங்கலை முன்னிட்டு கிளிநொச்சியில் - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் சிறப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 14,01,2022 தைப்பொங்கல் திருநாளில் S.Gசாந்தன் இசைக்குழுவின் பிரமாண்டமான இசைநிகழ்வும், தமிழர் திருநாளில் எம்மவர் விளையாட்டுக்கள், களிப்பூட்டும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
எனவே இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




