மற்றுமொரு பணிநீக்க சுற்றை அறிவித்தது கூகுள்
செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் தொடர்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான நபர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது.
வேலை குறைப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தளத்தில் விளம்பரம் செய்வதற்கு கூகுள் அதிக ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூகுள் நிறுவனம் தனது விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப வெளியீடு
அமெரிக்காவில் 80 சதவீத இணைய வர்த்தக பரிவர்த்தனைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம், கூகுளின் கிளவுட் கம்ப்யூட்டிங் யூனிட் விற்பனையாளர்களுக்கு இணையத்தள வியாபாரத்தை தனிப்பயனாக்கவும், செயல்பாடுகளை நவீனமயமாக்கவும் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகளை மாற்றவும் புதிய AI கருவிகளை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
புதிய கூகுள் AI கருவிகள், நடுத்தர விற்பனையாளர்களை இணையதளங்கள் அல்லது தொலைபேசி பயன்பாடுகளில் எளிதாக உட்பொதித்து, வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட உதவி மற்றும் பரிந்துரைகளை வழங்குவதை உள்ளடக்கியது என்று ஒரு வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் AI ஆனது தயாரிப்பு படங்களை பகுப்பாய்வு செய்வதற்கும், இணைய தேடல்களில் கண்டுபிடிப்பை மேம்படுத்துவதற்கு பொருத்தமான தயாரிப்பு விளக்கங்கள் அல்லது சொற்களை தயாரிப்பதற்கும் பணிபுரிகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக, கூகுள் கடந்த ஆண்டு சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |