தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கருத்தியலாளர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பு (Photos)
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இலங்கை அரசிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், கருத்தியலாளர்களுக்கும் இடையே கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனின் ஏற்பாட்டில் நேற்று இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இலங்கை அரசிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், தமிழர் தரப்பு எவ்விதமான நோக்கு நிலையில் அணுகுவது தொடர்பிலும் அதுசார்ந்த பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாகவும் இக் கூட்டுக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் சந்திப்பின் போக்கு தொடர்பாக மீண்டும் கூடிக் கலந்துரையாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ்
பிரேமச்சந்திரன், பொ.ஐங்கரநேசன் பா.கஜதீபன், க.அருந்தவபாலன், கே.பி.தவராசா
உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், பத்திரிகை பிரதம ஆசிரியர்கள், அரசியல்
ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam