அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு! பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலத்தை பொலிஸ் மா அதிபரின் உத்தரவை மீறி ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசாரணை
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசாரணை நடத்தி, குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்தும் அறிவுறுத்தல்களை வழங்கி பொலிஸ்மா அதிபரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri