புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், இன்று (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தவறான முடிவெடுத்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச வாசிகள் அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்ட போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது உடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri