இஸ்ரேலின் வான் வழி தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் பலி
காசா பகுதியில் உள்ள ரபா நகர் மீது பணயகைதிகளை மீட்கும் நோக்கில் இஸ்ரேல் பாரிய வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காசா நகரமான ரபாவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பு
இந்நிலையில் வான்வழி தாக்குதலின் மூலமாக 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்ற நிலையில் காசாவில் உள்ள 23 இலட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam