பொதுமக்களுக்கான விசேட நிவாரணப் பொதி அறிமுகம்
இலங்கை மக்களுக்கான விசேட நிவாரணப் பொதியொன்றை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வர்த்தகத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொதியில்,
சுப்பிரி சம்பா 10 கிலோ
ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை
ஒரு கிலோ சிவப்பு பருப்பு
ஒரு கிலோ இடியப்ப மா
500 கிராம் நெத்தலி
400 கிராம் நூடுல்ஸ்
400 கிராம் உப்பு
2 தேங்காய் பால் (330 மிலி பாக்கெட்)
100 கிராம் மிளகாய் தூள்
மிளகு தூள் 100 கிராம்
100 கிராம் மசாளா தூள்
100 கிராம் மஞ்சள்
100 கிராம் தேநீர்
80 கிராம் உடல் லோஷன்
சதோச சந்தன சோப்பு
100 மில்லி கை கழுவும் திரவம்
90 கிராம் சோயாமீட்
சதோச TFM தரப்படுத்தப்பட்ட சலவை சவர்க்காரம்
1 பைக்கற்று பப்படம்
10 முகக்கவசங்கள்
குறித்த பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு கிடைக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
