புத்தளத்தில் மீட்கப்பட்ட அரிய வகை விலங்கினம் (Video)
எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி தம்மை பாதுகாத்துக் கொள்ளும் அரியவகை எறும்புத்திண்ணியொன்று புத்தளத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - கல்லடி கிவுல பகுதியில் நேற்று (16.10.2022) மாலை வீடொன்றின் முற்றத்திலிருந்து இந்த அரிய வகை உயிரினம் வீட்டின் உரிமையாளரினால் பிடிக்கப்பட்டுள்ளது.
எறும்புத்திண்ணியொன்று மீட்பு
இந்நிலையில் எறும்புத்திண்ணியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் குறித்த எறும்புத்திண்ணியை உயிருடன் மீட்டுள்ளனர்.
உயிருடன் மீட்கப்பட்ட எறும்புத்திண்ணி தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இந்த அரிய வகை விலங்கினம் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



