யாழில் மருந்தகம் ஒன்றில் திடீர் சோதனை நடத்திய சுகாதார பரிசோதகர்கள்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Jul 22, 2024 05:01 PM GMT
Report

பலாலி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்று போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்து, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பிரகாரம் மருந்துகள் மற்றும் உணவுப் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கிய குழுவினர் திடீர் சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அங்கு அவ்வாறான பொருட்கள் எவையும் இல்லாத நிலையில் சோதனையிடுவதற்கு வந்த அதிகாரிகள் திரும்பியுள்ளனர்.

குறித்த மருந்தக உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் இறுதிக் கிரியைகளில் பங்கெடுத்திருந்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட்ட மற்றுமொரு குற்றச்சாட்டு

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட்ட மற்றுமொரு குற்றச்சாட்டு

போதைப் பொருள்

அத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் மரணச் சடங்கு இடம்பெறுகின்ற காரணத்திலும் மருந்தகத்தை திறக்காத நிலை காணப்பட்டுள்ளது.

யாழில் மருந்தகம் ஒன்றில் திடீர் சோதனை நடத்திய சுகாதார பரிசோதகர்கள் | A Raid At A Pharmacy In Jaffna

இந்நிலையில் விசாரணைக்கு வந்த அதிகாரிகளது கடமையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் குறித்த மருந்தக உரிமையாளர் தனது மருந்தகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்திருந்தார்.

ஆனால் தேடுதலின்போது போதைப் பொருள் எவையும் கிடைக்காத நிலை காணப்பட்டுள்ளது.

மருந்தகத்தின் உள்ளே சோதனையிடுவதற்கு எந்த எந்த அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்துரைக்கப்பட்ட ஏழு அதிகாரிகள் மாத்திரமே மருந்தகத்தின் உள்ளே சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பது வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா விடுதியொன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்பு

நுவரெலியா விடுதியொன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்பு

வழக்கு தாக்கல்

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மருந்தகத்தின் உள்ளே சோதனை செய்வதற்கான அதிகாரம் இல்லை.

ஆனால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது சுகாதார பரிசோதகர் ஒருவரும் உள்ளே சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக மருந்தக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் மருந்தகம் ஒன்றில் திடீர் சோதனை நடத்திய சுகாதார பரிசோதகர்கள் | A Raid At A Pharmacy In Jaffna

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனது முறைகேடு தொடர்பில் குறித்த மருந்தக உரிமையாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பலாலி வீதி கந்தர்மடம் சந்திக்கு அருகாமையில் மூன்று மருந்தகங்கள் உள்ளன. அதில் ஒரு மருந்தகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி சட்டத்திற்கு புறம்பானது என பாதிக்கப்பட்ட மருந்தக உரிமையாளரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்திற்கு அமைவாக வைத்தியசாலைக்கு அருகில் இல்லாத மருந்தகங்கள் இரண்டுக்கு இடையே சுமார் 250 மீற்றர்கள் தூரம் பேணப்பட வேண்டும் என்ற நியதி காணப்படுகிறது.

ஆனால் புதிதாக அனுமதி வழங்கப்பட்ட மருந்தகத்துக்கும் ஏற்கனவே உள்ள மருந்தகத்துக்கும் இடையேயான தூரமானது 200 மீற்றருக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு

கூகுள் வரைபடம்

தூரத்தை அளவிடுவதற்கு கூகுள் வரைபடம் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

யாழில் மருந்தகம் ஒன்றில் திடீர் சோதனை நடத்திய சுகாதார பரிசோதகர்கள் | A Raid At A Pharmacy In Jaffna

இரண்டு மருந்தகங்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரித்து காண்பிப்பதற்காக பிரதான வீதியையோ, கூகுள் வரைபடத்தினையோ கருத்தில் கொள்ளாது, மாநகர சபையில் பதிவில் இல்லாத சிறிய வீதிக்கு புதிய பெயரை சூட்டி அந்த தூரத்தை உருட்டி அளக்கும் வீல் அளவீட்டு முறை மூலம் அளவிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் செய்த முறைப்பாட்டுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்களாம் என மருந்தக உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US