மட்டக்களப்பில் 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மதபோதகர் ஒருவர் கைது
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி இருந்த மதபோதகர் ஒருவர் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மத போதகராக செயற்பட்டுவரும் சந்தேக நபருக்கு எதிராக வெளிநாடு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு குறித்த மதபோதகர் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு இன்று(21) கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை(22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |