முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு சென்ற தொலைபேசி அழைப்பு
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவுள்ளதால், வெற்றிடமாகப் போகும் அந்த பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உறுப்பினர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒரு சிறந்த அதிகாரியை நியமிப்பார்
பொலிஸ் மா அதிபர் தானே தெரிவு செய்யப்படுவதில்லை மாறாக ஜனாதிபதியாலும் அரசியலமைப்பு சபையாலும் தெரிவு செய்யப்படுகிறார்.
மேலும் ஜனாதிபதி ஒரு சிறந்த அதிகாரியை நியமிப்பார் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
You may like this video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
