தமிழர் பகுதியில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்! மனிதர்களை மிஞ்சிய நாயின் பாசம்(Video)
மட்டக்கள்ப்பு- வாழைச்சேனை பகுதியில் நாய் ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை எனும் வயோதிபப் பெண்ணொருவர் அவரது வீட்டில் பல வருடங்களாக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.
கண்ணீருடன் நாய்
இந்நிலையில், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வயோதிப பெண்மணி அவரது மகளின் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று(15.03.2023) மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை அவரது வளர்ப்பு நாய் கண்ணீருடன் சென்ற காட்சி பலரை கண்கலங்க வைத்துள்ளது.
மூதாட்டி மரணமடைந்ததை உணந்து கொண்ட நாய் கண்ணீர் சிந்தி மூதாட்டியின் உடல் அருகில் நின்றுள்ளது.
மூதாட்டி வசித்த இடத்தில் நாய்

மரணமடைந்த மூதாட்டியின் உடல் அவரது மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் இன்று (16.03.2023) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பயணித்த நாய் பட்டாசு சப்தத்தையும் பொருப்படுத்தாமல் மண்ணறை வரை சென்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நன்றியுள்ள அந்த நாய் நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan