முல்லைத்தீவில் துவிச்சக்கர வண்டியுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையான இன்றைய தினம் (11.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கைவேலி, சுண்ணாம்புசூளையடி வீதியில் வசிக்கும் 28 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சிவராத்திரி தினத்தன்று (08) கந்தசாமி கோயிலுக்கு வந்த பக்தருடைய துவிச்சக்கரவண்டி திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து துவிச்சக்கரவண்டி உரிமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது இன்றைய தினம்(11) பிற்பகல் குறித்த நபர் துவிச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் ஏற்கனவே துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam