கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கொழும்பில் (Colombo) இருந்து வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அவரது நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று(29.04.2024) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கொழும்பை சேர்ந்த கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். வெளிநாட்டில் வசித்து வருபவரது வீடு காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது.
குறித்த வீட்டில் வேலை செய்வதற்காக உயிரிழந்த நபரும் அவரது நண்பரும் வருகை தந்திருந்தனர். இதன்போது அந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்(Teaching Hospital Jaffna) வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |