திடீரென திகதி மாற்றப்பட்ட தவெக விஜயின் பரப்புரை கூட்டம்
இந்திய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரைக்கான திகதி பொலிஸாரால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரூரில் விஜயின் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே சென்னையில் அண்மையில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜயிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் அனுமதி
அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.கவினர் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரின் அனுமதியை பொறுத்து திகதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இருப்பினும், சேலத்தில் விஜயினை வேறுதிகதியில் பிரசாரம் மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி டிசம்பர் 4ஆம் திகதிக்கு பதில் வேறு தேதியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்குமாறு விஜய் தரப்புக்கு பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், கார்த்திகை தீபம், ஜெயலலிதா நினைவு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம் வரிசையாக உள்ளதால் வேறு தேதியில் பிரசாரம் மெற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |