யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
யாழில்(Jaffna) மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலமொன்று இன்றையதினம்(9) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்
பொலிஸார் தீவிர விசாரணை
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
