மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு: யாழில் இளம் குடும்பஸ்தரின் துயர முடிவு
யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று(08) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார்.

இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri