மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட நோயாளி
களுபோவில போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், வைத்தியசாலையில் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
புற்றுறோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளி
இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. கோனபொல, கந்தேவத்த பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தொண்டையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்து களுபோவில வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் நான்காவது மாடியில் ஜன்னலை திறந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.
நோயாளி சிகிச்சை பெற்று வந்த விடுதியில் தங்கியிருக்கும் ஏனைய நோயாளிகள் இது குறித்து வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் பொலிஸார் உடலை மீட்டு பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து கொஹூவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
